/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அமராவதி ஆற்றுப்பாலத்தை சீரமைக்க வலியுறுத்தல்
/
அமராவதி ஆற்றுப்பாலத்தை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : அக் 06, 2025 10:48 PM
உடுமலை:அமராவதி ஆற்றுப்பாலத்தில், தடுப்புச்சுவர்களில் விரிசல் காணப்படுவதால், அவற்றை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றுப்பாலம் உள்ளது.
இப்பாலத்தின் வழியாக, மதுரை, திண்டுக்கல் உட்பட தென்மாவட்ட நகரங்களுக்கும், கோவை, பாலக்காடு, ஊட்டி போன்ற நகரங்களுக்கும் தினமும் பஸ்கள், கார் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
இதனால், இந்த பாலம் எப்பொழுதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும். இப்பாலத்தின் தடுப்புச்சுவர்கள் பராமரிப்பின்றி சேதமடைந்து, விரிசல் விட்டும் காணப்படுகிறது. ஓரங்களில் செடிகளும் வளர்ந்துள்ளன.
இதனால், பாலம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், இதில், பிரதிபலிப்பான், மின்விளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில், இரு சக்கர வாகன ஓட்டுனர்கள், பாதசாரிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.
எனவே, போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இப்பாலத்தினை சீரமைக்கவும், பிரதிபலிப்பான், மின்விளக்குகள் பொருத்தவும், நெடுஞ்சாலைத்துறையினரும், மடத்துக்குளம் பேரூராட்சியினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.