/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவுட் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வலியுறுத்தல்
/
அவுட் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜன 29, 2024 11:37 PM
உடுமலை:உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், அவுட் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.
கோவை - திண்டுக்கல் வழித்தடத்தில் உடுமலை ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது. உடுமலை வழியாக, கோவை - மதுரை, பாலக்காடு - திருச்செந்துார், பாலக்காடு - சென்னை, திருவனந்தபுரம் - மதுரை, மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தினமும் நுாற்றுக்கணக்கான பயணியர் இங்கு வந்து செல்கின்றனர். முன்பதிவு, டிக்கெட் எடுக்கவும் ஏராளமான பயணியர் வருகின்றனர். பயணியரின் பாதுகாப்பு கருதியும், சமூக விரோத செயல்களை தடுக்கவும், அங்கு அவுட் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க தெற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உடுமலை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.