/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராமங்களில் நாய்களுக்கு கருத்தடை செய்ய வலியுறுத்தல்
/
கிராமங்களில் நாய்களுக்கு கருத்தடை செய்ய வலியுறுத்தல்
கிராமங்களில் நாய்களுக்கு கருத்தடை செய்ய வலியுறுத்தல்
கிராமங்களில் நாய்களுக்கு கருத்தடை செய்ய வலியுறுத்தல்
ADDED : மே 10, 2025 02:57 AM
பொங்கலுார் : ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளே விவசாயிகளின் முக்கிய வாழ் வாதாரமாக உள்ளது. ஆடு, மாடுகளை திருடர்களிடமிருந்தும், வேட்டை விலங்குகளிடமிருந்தும் காப்பாற்றுவதற்காக விவசாயிகள் நாய் வளர்ப்பதை காலம் காலம்காலமாக பின்பற்றி வருகின்றனர்.
சமீப ஆண்டுகளாக இறைச்சி தேவைக்காக பண்ணை கோழிகள் அதிக அளவில் வளர்க்கப்படுகின்றன. பண்ணைகளில் இறந்த கோழிகளை சிலர் திறந்த வெளியில் வீசுகின்றனர். கடைகளில் வெட்டப்படும் ஆடு, கோழிகளின் கழிவுகள் வெட்ட வெளியில் வீசப்படுகின்றன.
இவற்றை சாப்பிட்டு பழகிய நாய்கள் தங்கள் குணாதிசயங்களை மாற்றிக் கொண்டுள்ளன. ஆடுகளை காவல் காத்து வந்த நாய்களே ஆடுகளுக்கு எமனாக மாறி வருகிறது.
கூட்டமாக நான்கைந்து நாய்கள் ஆட்டுப்பட்டியில் புகுந்து அங்குள்ள ஆடுகளை கடித்து ரத்தத்தை குடித்து விடுகின்றன. உடனடியாக அவை இறக்கின்றன. மொத்தமாக காலி செய்வதால் விவசாயிகளின் வாழ்வாதாரமே கேள்விக்குறி ஆகிவிடுகிறது.
நாய்களின் இனப் பெருக்கத்தை கட்டுப்படுத்த அரசு பட்ஜெட்டில், 20 கோடி ஒதுக்கி உள்ளது. இந்தத் தொகை போதாது. கடந்த ஆண்டு பத்து கோடி ரூபாய் ஒதுக்கிய போதும் நாய்களை கட்டுப்படுத்த முடியவில்லை.
வெறி நாய்களின் தொல்லை கிராமங்களில் தான் அதிகம் உள்ளது. கால்நடை மருத்துவமனை மூலமே தெருநாய்களை கட்டுப்படுத்த முடியும் என்பது விவசாயிகளின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
விவசாயிகள் கூறியதாவது: ஒவ்வொரு கிராமத்திலும் கால்நடை மருத்துவ மனைகள் அமைந்துள்ளன. கிராமங்களில் சராசரியாக, 5,000 முதல் 10 ஆயிரம் பேர் வரை வசிக்கின்றனர். ஒவ்வொரு கிராமத்திலும் சில ஆயிரம் நாய்கள் மட்டுமே இருக்கும். கால்நடை மருத்துவர்கள் காலையில் இரண்டு மணி நேரம் மட்டும் மிகவும் பிசியாக உள்ளனர். கால்நடை மருத்துவர்களுக்கு நிறைய நேரம் மிச்சம் உள்ளது.
கால்நடை மருத்துவமனைகளில் மாதம் தோறும், 100 நாய்களுக்கு கருத்தடை செய்தாலே ஒன்றிரண்டு ஆண்டுகளில் அனைத்து நாய்களுக்கும் கருத்தடை செய்துவிட முடியும். பெண் நாய்களுக்கு கருத்தடை செய்வதில் முன்னுரிமை தரலாம். இழப்பீட்டு தொகையோ, காப்பீடோ தீர்வாகாது.
நாய்களைப் பிடித்துக் கொடுப்பதை மாநகராட்சி ஊழியர் மூலம் செய்யலாம். கருத்தடையை கால்நடை மருத்துவர் வசம் ஒப்படைத்து பணிகளை தீவிர படுத்தினால் வெறிநாய் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து அரசு உடனடியாக முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.