/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
செஞ்சிலுவை சங்கங்களுக்கு நிதி தேவை; ஒதுக்கீடு செய்ய அரசுக்கு வலியுறுத்தல்
/
செஞ்சிலுவை சங்கங்களுக்கு நிதி தேவை; ஒதுக்கீடு செய்ய அரசுக்கு வலியுறுத்தல்
செஞ்சிலுவை சங்கங்களுக்கு நிதி தேவை; ஒதுக்கீடு செய்ய அரசுக்கு வலியுறுத்தல்
செஞ்சிலுவை சங்கங்களுக்கு நிதி தேவை; ஒதுக்கீடு செய்ய அரசுக்கு வலியுறுத்தல்
ADDED : ஜன 15, 2024 10:01 PM
உடுமலை:அரசு பள்ளிகளில் செஞ்சிலுவை சங்கங்கள் முழுமையாக செயல்பட, அரசு நிதிஒதுக்கீடு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு பாடத்தோடு, சேவை மனபான்மையை மேம்படுத்துவதற்கான ஒரு பகுதியாக, ஜே.ஆர்.சி., எனப்படும் இளம் செஞ்சிலுவை சங்கம் பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டம் மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தை கற்றுத்தருவதோடு, ஆபத்து காலத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்வது, ரத்த தானம், பெண் குழந்தைகளுக்கான உரிமைகள், குழந்தைகளை பாலியல் தொல்லைகளிலிருந்து பாதுகாத்துக்கொள்வது, விபத்துகளின்போது முதலுதவி செய்வது குறித்தும், செஞ்சிலுவை சங்க செயல்பாடுகள் உள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் வாயிலாக, மாணவர் எண்ணிக்கை அடிப்படையில், இத்திட்டத்துக்கான நிதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஆனால், நடுநிலைப்பள்ளிகளில் அதற்கான வாய்ப்பும் இல்லை. இருப்பினும் இப்பள்ளிகளில் செஞ்சிலுவை சங்கம் துவக்க அரசு அறிவித்ததால், சில ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்டது. ஆனால், திட்டத்தின் செயல்பாடுகளுக்கென இதுவரை, அரசின் சார்பில் எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. இதனால், விருப்பமுள்ள பள்ளிகளில் மட்டுமே, ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் முயற்சியால், இளம் செஞ்சிலுவை சங்கத்தை செயல்படுத்துகின்றனர்.
பெரும்பான்மையான பள்ளிகளில், பெயரளவில், மட்டுமே செஞ்சிலுவை சங்கங்கள் உள்ளன. மாணவர்களிடம் ஆர்வம் இருந்தாலும், அதை மேம்படுத்தி, அடுத்தடுத்த நிலைக்கு கொண்டு செல்ல, அரசின் ஒத்துழைப்பு இல்லாததால், திட்டம் துவக்கத்தோடு முடங்கி விட்டது.
திட்டத்தை பள்ளிகளில் முழுமையாக செயல்படுத்த, அரசின் சார்பில், நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கல்வியாளர்களும், பெற்றோரும் எதிர்பார்க்கின்றனர்.