/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவசாயத்தில் நவீன கருவிகள் பயன்பாடு; தொழிலாளர் பற்றக்குறையை தவிர்க்க யோசனை
/
விவசாயத்தில் நவீன கருவிகள் பயன்பாடு; தொழிலாளர் பற்றக்குறையை தவிர்க்க யோசனை
விவசாயத்தில் நவீன கருவிகள் பயன்பாடு; தொழிலாளர் பற்றக்குறையை தவிர்க்க யோசனை
விவசாயத்தில் நவீன கருவிகள் பயன்பாடு; தொழிலாளர் பற்றக்குறையை தவிர்க்க யோசனை
ADDED : நவ 05, 2024 11:21 PM

திருப்பூர் ; 'விவசாய தொழிலில் தொழிலாளர் பற்றாக்குறையை தவிர்க்க, விவசாய உபகரணங்களை பயன்படுத்த வேண்டும்' என, வேளாண் துறை ஊக்குவிக்கிறது.
வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ், தற்போது, விவசாயிகளுக்கு சுழல் கலப்பை மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு சுழல் கலப்பைக்கு, 46 ஆயிரத்து 800 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
அவிநாசி ஒன்றியம், கானுார் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் தேசிய உணவு பாதுகாப்புத்திட்ட ஆலோசகர் அரசப்பன், அவிநாசி வேளாண் உதவி இயக்குனர் அன்பழகி, வேளாண் அலுவலர் சத்யா, உதவி வேளாண் அலுவலர் சிவராஜ் ஆகியோர், விவசாயிகளுக்கு மானியத்தில் சுழல் கலப்பை வழங்கினர்.
உணவு பாதுகாப்பு திட்ட ஆலோசகர் அரசப்பன் கூறியதாவது:
விவசாய விளைப் பொருட்களின் உற்பத்தியை இலக்காக கொண்டு, வேளாண் துறை செயல்பட்டு வருகிறது. திருப்பூர், தொழில் நகரமாக இருப்பதால், விவசாய பணிக்கு கூலியாட்கள் கிடைப்பதில்லை. எனவே, விதைப்பு முதல் அறுவடை வரை அனைத்துக்கும் மானிய உதவியுடன் கூடிய நவீன விவசாய உபகணங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
சுழல் கலப்பை உதவியுடன் உழவு செய்த நிலங்களில் உயிர்ச்சத்து அதிகரிக்கும்; அந்த மண் இயற்கை வளம் பெறுகிறது. களைகள் மண்ணிலேயே துாளாக்கப்பட்டு விடுவதால், களை களும் மண்ணிற்கு உரமாகிறது. மண்ணின் அடியில் உள்ள கூட்டுப்புழுக்கள் வெளிக்கொணரப்பட்டு அழிக்கப்படுவதால் அடுத்த பருவத்திற்கு புழுக்களின் தாக்குதல் குறைகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.