/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உத்தமலிங்கேஸ்வரர் கோவிலில் மே 12ம் தேதி தேரோட்டம்
/
உத்தமலிங்கேஸ்வரர் கோவிலில் மே 12ம் தேதி தேரோட்டம்
ADDED : ஏப் 22, 2025 06:24 AM
அனுப்பர்பாளையம்; பெருமாநல்லுார், உத்தம லிங்கேஸ்வரர் கோவில் சித்ரா பவுர்ணமி தேர்த்திருவிழா அடுத்த மாதம் மே 5 முதல் தொடங்கி நடைபெற உள்ளது.
மே மாதம் 6ம் தேதி கொடியேற்றம், 7 முதல் 9ம் தேதி வரை இரவு 8:00 மணிக்கு மண்டபகட்டளை, 10ம் தேதி இரவு சாமி ரிஷப வாகனத்தில் உலா வருதல், 11ம் தேதி இரவு திருக்கல்யாண வைபவம் ஆகியன நடக்கின்றன.
மே 12 மாலை 3:30 மணிக்கு தேர் வடம் பிடித்தல், இரவு நாட்டுப்புற கலை நிகழ்ச்சி, 13ம் தேதி இரவு 8:00 மணிக்கு பரிவேட்டை, குதிரை வாகன நிகழ்ச்சி, 14ம் தேதி காலை 9:00 மணிக்கு நடராஜர் அபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
ஏற்பாடுகளை கோவில் தக்கார் சபரீஷ்குமார், செயல் அலுவலர் சங்கர சுந்தரேஸ்வரன் ஆகியோர் செய்து வருகின்றனர்.