/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உத்தமலிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம் கோலாகலம்
/
உத்தமலிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம் கோலாகலம்
ADDED : மே 13, 2025 12:50 AM

அனுப்பர்பாளையம்; பெருமாநல்லுாரில் புகழ்பெற்ற கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தமலிங்கேஸ்வரர் கோவிலில், சித்ரா பவுர்ணமி தேர்த்திருவிழா, 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.
விழாவில், நேற்று முன்தினம் இரவு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. நேற்று மாலை திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் ஈஸ்வரன் கோவில் திடலில் இருந்து, நான்கு ரத வீதிகள் வழியாக சென்று மீண்டும் தேர் நிலையை அடைந்தது.
இன்று பரிவேட்டை, நாளை நடராஜர் அபிஷேகம் ஆகியன நடக்கிறது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சங்கர சுந்தரேஸ்வரன், கோவில் தக்கார் சபரீஷ்குமார் ஆகியோர் செய்துள்ளனர்.