/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உத்தமலிங்கேஸ்வரர் கோவில் தேர் முகூர்த்தக்கால் பூஜை
/
உத்தமலிங்கேஸ்வரர் கோவில் தேர் முகூர்த்தக்கால் பூஜை
உத்தமலிங்கேஸ்வரர் கோவில் தேர் முகூர்த்தக்கால் பூஜை
உத்தமலிங்கேஸ்வரர் கோவில் தேர் முகூர்த்தக்கால் பூஜை
ADDED : மே 06, 2025 06:41 AM

அனுப்பர்பாளையம்; பெருமாநல்லுாரில் பிரசித்தி பெற்ற உத்தமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.
கோவில் சித்ரா பவுர்ணமி தேர்த்திருவிழா இன்று கொடி யேற்றத்துடன் துவங்கு கிறது. நேற்று மாலை தேர் முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக ஸ்ரீ உத்தம நாச்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, வாஸ்து சாந்தியுடன் தேர் முகூர்த்தக்கால் நடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இன்று காலை கொடியேற்றம் நடக்கிறது. நாளை முதல் 9ம் தேதி வரை இரவு 8:00 மணிக்கு மண்டப கட்டளை, 10ம் தேதி இரவு ரிஷப வாகன காட்சி, 11ம் தேதி இரவு திருக்கல்யாண வைபவம், 12ம் தேதி தேரோட்டம் நடக்கின்றன.
வரும் 13ம் தேதி இரவு 8:00 மணிக்கு பரிவேட்டை, குதிரை வாகன நிகழ்ச்சி, 14ம் தேதி காலை 9:00 மணிக்கு நடராஜர் அபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஏற்பாடுகளை கோவில் தக்கார் சபரீஷ்குமார், செயல் அலுவலர் சங்கர சுந்தரேஸ்வரன் ஆகியோர் செய்து வருகின்றனர்.