ADDED : ஜன 04, 2026 04:41 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்: இன்றுடன் விடுமுறை முடிகிறது. நாளை (5ம் தேதி) துவக்க, நடுநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் திறக்கப்படுகிறது.
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழங்க, 1.12 லட்சம் மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் ஒரு வாரம் முன்பே சென்னையில் இருந்து தருவிக்கப்பட்டு, பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாளை பள்ளி திறந்து, இறைவணக்க கூட்டம் முடிந்ததும், மாணவ, மாணவியருக்கு புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது.
மாவட்ட கல்வி அலுவலர் காளிமுத்து கூறுகையில், ''பள்ளி வளாகம், வகுப்பறை, மைதானம் துாய்மைப்படுத்துவது குறித்து ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. புத்தகங்கள் தருவிக்கப்பட்டு, தலைமை ஆசிரியர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
