/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி முகாம்
/
ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி முகாம்
ADDED : ஏப் 26, 2025 11:46 PM

திருப்பூர்: தமிழக ஹஜ் கமிட்டி சார்பில், மாநிலம் முழுவதும் உரிய மாவட்ட தலைநகரங்களில் ஹஜ் பயணிகளுக்காக தடுப்பூசி முகாமை ஏற்பாடு செய்தது.
திருப்பூர் மாவட்ட ஹாஜிக்கள் ஒருங்கிணைந்த குழு சார்பில், கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தலின் பேரில், நடப்பாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளோருக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் நேற்று நடத்தப்பட்டது.
அவிநாசி ரோடு, டி.எஸ்.கே., மாநகராட்சி மருத்துவமனையில் இம்முகாம் நடந்தது. தமிழக ஹஜ் கமிட்டி, திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சபியுல்லா தலைமை வகித்தார். தொற்று நோயியல் டாக்டர் சிவரஞ்சனி முன்னிலை வகித்தார். திருப்பூர் மாவட்ட ஹாஜிக்கள் ஒருங்கிணைந்த குழு நிர்வாகி சைபுதீன் வரவேற்றார்.
திருப்பூர் மாவட்டத்திலிருந்து செல்லும் 78 பெண்கள் உள்ளிட்ட 158 ஹஜ் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, சொட்டு மருந்து மற்றும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாவட்ட சுகாதார அலுவலர் ஜெயந்தி மேற்பார்வையில் திருப்பூர் மருத்துவ கல்லுாரி மருத்துவர் குழுவினர் முகாமை நடத்தினர்.