/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி முகாம்
/
பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி முகாம்
ADDED : ஜன 16, 2025 11:28 PM

உடுமலை, ;குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு தடுப்பூசி முகாம் நடந்தது.
குமரலிங்கம் அரசு மருத்துவமனை, கணியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில், குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில், வளர் இளம் பருவத்தினருக்கான மருத்துவ கருத்தரங்கம் நடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் மாரியப்பன் தலைமை வகித்தார். கருத்தரங்கில் பெண்களுக்கான சுகாதாரம், மாணவியர் சந்திக்கும் உளவியல் தொடர்பான பிரச்னைகள் குறித்து மருத்துவர்கள் விளக்கமளித்தனர்.
பெண் குழந்தைகளுக்கான தன் சுத்தம், நோய்த்தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ரணஜன்னி தடுப்பூசி போடப்பட்டது.
உதவித்தலைமையாசிரியர் செந்தில்குமார் நன்றி தெரிவித்தார்.