/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வைகாசி விசாக பூஜை; திரளான பக்தர்கள் பங்கேற்பு
/
வைகாசி விசாக பூஜை; திரளான பக்தர்கள் பங்கேற்பு
ADDED : ஜூன் 08, 2025 10:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், வைகாசி விசாக திருவிழா நடந்தது.
உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், வைகாசி விசாகத்தையொட்டி வள்ளி தெய்வசேனா சமேத சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. காலையில் பால், பன்னீர், திருநீறு உட்பட பல்வேறு திரவியங்களில் சுவாமிக்கு மகா அபிேஷகம் நடந்தது.
சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. பக்தர்கள் ஆரோகரா கோஷத்துடன் வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் வள்ளி தெய்வசேனா சமேத சுப்ரமணிய சுவாமிகளின் வெள்ளித்தேர் திருவீதி உலா நடந்தது.