ADDED : பிப் 23, 2024 12:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருக வள்ளலார் கோட்டத்தின் சார்பில், நாள்தோறும் மூலிகை கஞ்சி வழங்கும் நிகழ்ச்சி சேவூர் போலீஸ் ஸ்டேஷன் அருகே நேற்று துவங்கப்பட்டது. கோட்டத்தின் தலைவர் சிதம்பர சுவாமிநாதன் துவக்கி வைத்தார். ஏராளமானோர் பங்கேற்றனர். ஏற்கனவே இவ்வமைப்பு வாயிலாக, திருமுருகன்பூண்டி, போயம்பாளையம், அவிநாசி தேர்நிலை மற்றும் அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் தினமும், காலை, 7:45 மணிக்கு மூலிகை கஞ்சி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, ஐந்தாவதாக சேவூரில் துவக்கியுள்ளனர்.
இனி, தினமும், காலை, 7:45 மணிக்கு, சேவூர் - கைகாட்டியில், மூலிகை கஞ்சி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட உள்ளதாக, அமைப்பினர் தெரிவித்தனர்.