ADDED : அக் 06, 2024 04:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், : வள்ளலாரின் 202வது அவதார நாள் மற்றும் திருமுருகன்பூண்டி திருமுருக வள்ளலார் கோட்ட, 5வது ஆண்டு துவக்க விழா ஆகியன நேற்று நடைபெற்றது.
டாக்டர் விஜயலட்சுமி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். அகவல் பாராயணம் நடைபெற்றது. செம்மாண்டாம்பாளையம் வள்ளலார் முதியோர் இல்ல அமைப்பாளர் குருசாமி, சன்மார்க்க கொடியை ஏற்றி வைத்தார். வடலுார் கருணை இல்லத்தைச் சேர்ந்த சுப்ரமணியம், 'ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு', என்ற தலைப்பில் பேசினார்.
திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பாலசுப்ரமணியம், முன்னாள் கவுன்சிலர் ஜெயலட்சுமி ஆகியோர் அன்னதானத்தை துவக்கி வைத்தனர். திருவருட்பா குறித்து ராமசாமி சிறப்புரை ஆற்றினார். மாலை, வள்ளலார் திருவீதியுலா நடைபெற்றது.