/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெண்கள் பங்கேற்ற வள்ளிக் கும்மியாட்டம்
/
பெண்கள் பங்கேற்ற வள்ளிக் கும்மியாட்டம்
ADDED : பிப் 23, 2024 12:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி;அவிநாசியில் உள்ள பிளேக் மாரியம்மன் கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வ சக்தி கணபதி கோவிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது.
இதற்காக அழகு வள்ளி கலை குழுவின் இருபதாவது அரங்கேற்ற நிகழ்ச்சியாக வள்ளி கும்மியாட்டம் பிளேக் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள ஆப்பிள் பட்ஸ் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. அலகுமலையைச் சேர்ந்த ஆசிரியர்கள் பால தண்டாயுதபாணி, செல்வராஜ், பாபு ஆகியோர் 50க்கும் மேற்பட்ட பெண்களுக்கு கடந்த ஒரு மாதமாக பயிற்சி அளித்தனர். இதில் வரலாற்றுத் தொடர்புடைய கிராமிய பாடலுக்கு ஏற்றவாறு வள்ளி கும்மியாட்டம் ஆடினர். இந்நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.