UPDATED : அக் 06, 2026 09:05 PM
ADDED : அக் 06, 2026 12:06 AM

அ நிறம் | அளவு
திருப்பூர், ராமையா காலனி, ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ மாகாளி அம்மன் கோவில் அருகே, ஸ்ரீ வள்ளிமுருகன் கலைக்குழுவின் வள்ளி கும்மியாட்டம் அரங்கேற்ற விழா நடந்தது.
விநாயகர் வழிபாட்டை தொடர்ந்து, முளைப்பாலிகையை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். தொடர்ந்து முருகன் வழிபாட்டுடன் வள்ளி கும்மி அரங்கேற்ற விழா நடந்தது. கும்மியாட்டத்தை ஆசிரியர் பெரியசாமி, இணை ஆசிரியர் காளீஸ்வரன் நடத்தினர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தேவி, மோகனா மற்றும் கோவில் மகளிர் குழுவினர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
