/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேன் டயர் வெடித்து போக்குவரத்து பாதிப்பு
/
வேன் டயர் வெடித்து போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜன 22, 2026 05:16 AM

அவிநாசி: அவிநாசி அருகே டயர் வெடித்து வேன் கவிழ்ந்ததில், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
கோவையில் இருந்து திருப்பூர், செட்டிபாளையம் பகுதியில் உள்ள ஆடை ஏற்றுமதி நிறுவனத்திற்கு நுால் பண்டல் ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் வேன் சென்று கொண்டிருந்தது.
திருமுருகன்பூண்டி பகுதியில் வந்த போது பின்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையின் நடுவே கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. வேனை ஓட்டி வந்த டிரைவர், கிளீனர் இருவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
பூண்டி போலீசார் மாற்று வாகனத்தில் நுால் பண்டல்களை ஏற்றி அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக அவிநாசி - திருப்பூர் ரோட்டில், 2 மணி நேரம் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் நீண்ட துாரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

