/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'வந்தே பாரத்' ரயில் இயக்கம்: ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி
/
'வந்தே பாரத்' ரயில் இயக்கம்: ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி
'வந்தே பாரத்' ரயில் இயக்கம்: ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி
'வந்தே பாரத்' ரயில் இயக்கம்: ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி
ADDED : ஜன 06, 2024 12:44 AM
திருப்பூர்;திருப்பூர் வழியாக இயங்கும் சென்னை - கோட்டயம் வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவையில் இருந்து சென்னைக்கு 'வந்தே பாரத்' ரயில் ஓராண்டாக இயங்கி வந்த நிலையில், பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்க, வாராந்திர வந்தே பாரத் ரயில் (செவ்வாய் தோறும்) இயக்கப்படுகிறது. வழக்கமான வந்தே பாரத் இயங்காத செவ்வாய்கிழமை மட்டும், சிறப்பு வந்தே பாரத் ரயில் இயங்குகிறது.
இந்நிலையில், திருப்பூர், ஈரோடு ஸ்டேஷன்களில் நின்று, சென்னை செல்லும் வகையில் மேலும் ஒரு வந்தே பாரத் ரயில் (எண்: 06092) டிச., மாதம் அறிவிக்கப்பட்டது. சபரிமலை பக்தர்கள் வசதிக்காக தற்காலிகமாக அறிவிக்கப்பட்ட இந்த ரயிலின் இயக்கம், கூட்ட நெரிசல் அதிகரிப்பதால், மேலும் இரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை (7ம் தேதி), வரும், 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையில் இருந்து கோட்டயத்துக்கு வந்தே பாரத் ரயில் (எண்:06091) இயங்கும். இரவு, 11:30 க்கு சென்னையில் புறப்படும் ரயில், மறுநாள் மதியம், 1:10 க்கு கோட்டயம் சென்று சேரும். காலை, 6:30 க்கு ரயில் திருப்பூர் வரும்.
மறுமார்க்கமாக கோட்டயத்தில் இருந்து சென்னைக்கு வரும், 8 மற்றும், 15ம் தேதி வந்தே பாரத் சிறப்பு ரயில் (எண்:06092) இயங்கும். இரவு, 8:45 க்கு கோட்டயத்தில் புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை, 3:15 மணிக்கு திருப்பூர் வரும். காலை 10:30 மணிக்கு சென்னை சென்று சேரும். இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு துவங்கி நடந்து வருகிறது.