ADDED : டிச 12, 2024 06:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; காங்கயம் அருகே காருக்குள் வி.ஏ.ஓ., இறந்து கிடந்தார்.
திருப்பூர் மாவட்டம், குன்னத்துார் அடுத்த 16 வேலம்பாளையத்தில் வி.ஏ.ஓ.,வாக பணியாற்றி வந்தவர், ஜெகநாதன், 47. மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.இரண்டு நாட்கள் முன், ஜெகநாதன், தன் சொந்த ஊரான காங்கயம் அடுத்த முத்துார், சின்னகாங்கேயம்பாளையம் வந்தார். தான் வந்த காரிலேயே துாங்கினார். நேற்று காலை காரிலிருந்து துர்நாற்றம் வீசியது. பொதுமக்கள் பார்த்த போது, காருக்குள் ஜெகநாதன் சடலமாக, அழுகிய நிலையில் கிடந்தார். வெள்ளகோவில் போலீசார் சடலத்தை மீட்டனர். 'பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் அவரது இறப்புக்கான காரணம் தெரிய வரும்' என்று போலீசார் தெரிவித்தனர்.