/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பட்டா மாற்ற ரூ.40,000 லஞ்ச வி.ஏ.ஓ.,வுக்கு 'காப்பு'
/
பட்டா மாற்ற ரூ.40,000 லஞ்ச வி.ஏ.ஓ.,வுக்கு 'காப்பு'
பட்டா மாற்ற ரூ.40,000 லஞ்ச வி.ஏ.ஓ.,வுக்கு 'காப்பு'
பட்டா மாற்ற ரூ.40,000 லஞ்ச வி.ஏ.ஓ.,வுக்கு 'காப்பு'
ADDED : அக் 31, 2025 12:31 AM

பொங்கலுார்:  பட்டா மாறுதல் செய்ய விவசாயியிடம், 40,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.,வை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், பொங்கலுார் அடுத்த காட்டூரை சேர்ந்தவர் ராமமூர்த்தி, 38, விவசாயி. இவருக்கு சொந்தமான நிலத்துக்கு பட்டா மாறுதல் செய்ய, ஆன்லைனில் விண்ணப்பித்தார்.
விண்ணப்பம் மீது நடவடிக்கை எடுக்க, காட்டூர் வி.ஏ.ஓ., ஜெயக்குமார், 51, என்பவரை ராமமூர்த்தி அணுகினார். ஜெயக்குமார், 40,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. 23,000 ரூபாயை ராமமூர்த்தி கொடுத்தார். இருப்பினும் பேசிய தொகையை முழுமையாக தர வேண்டும் என ஜெயக்குமார் வற்புறுத்தினார்.
இதையடுத்து, ராமமூர்த்தி திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். போலீசார் ஆலோசனையில், நேற்று மதியம் தன் தோட்டத்துக்கு ஜெயக்குமாரை வரவழைத்து, அவரிடம், 17,000 ரூபாயை கொடுத்தார். மறைந்திருந்த போலீசார், ஜெயக்குமாரை கைது செய்தனர்.

