/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பல்வேறு வளர்ச்சி பணிகள் பூமி பூஜையுடன் துவக்கம்
/
பல்வேறு வளர்ச்சி பணிகள் பூமி பூஜையுடன் துவக்கம்
ADDED : ஜன 23, 2026 05:38 AM
அனுப்பர்பாளையம்: -மாநகராட்சி, 2வது மண்டலத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் பூமி பூஜையுடன் நேற்று துவங்கியது.
திருப்பூர் மாநகராட்சி, இரண்டாவது மண்டலம், 32வது வார்டு, தங்க மாரியம்மன் கோவில் முதல் தொட்டிய மண்ணரை சாலை சந்திப்பு வரை தார் தளம் அமைக்க, 96 லட்சம் ரூபாய், ஏ.எஸ்.பண்டிட் நகர் பள்ளி முதல் தொட்டிய மண்ணரை சாலை சந்திப்பு வரை தார் தளம் அமைக்க 94 லட்சம் ரூபாய்.
இரண்டாவது வார்டு, பாண்டியன் நகர் டீச்சர்ஸ் காலனியில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்க ஒரு கோடியே 98 லட்சம் ரூபாய், 6வது வார்டு, கவுண்டநாயக்கன்பாளையம் பிரதான சாலை முதல் கல்லாறு ஓடைவரை மழைநீர் வடிகால் அமைக்க 11 கோடியே, 37 லட்சம் ரூபாய் மாநகராட்சி சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இப்பணிகளுக்கான பூமி பூஜை மற்றும் பணிகள் துவக்க விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் மேயர் தினேஷ்குமார் தலைமை வகித்து, பணிகளை துவக்கி வைத்தார். மாநகராட்சி 2வது மண்டல தலைவர் கோவிந்தராஜ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

