தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வங்கி சேவையில் பல்வேறு தடைகள்

 வங்கி சேவையில் பல்வேறு தடைகள்

 வங்கி சேவையில் பல்வேறு தடைகள்


ADDED : பிப் 18, 2026 06:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2026 06:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: ''வங்கி சேவைகள், ஏற்றுமதி நிதி தொடர்பான நடைமுறைகளில், பல தடைகள் நிலவுகின்றன,'' என, ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.

ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) தலைவர் சக்திவேல் கூறியதாவது:

கடந்த மாத ஆயத்த ஆடை ஏற்றுமதி, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டாலர் மதிப்பில், 3.8 சதவீதம் குறைந்துள்ளது. இருப்பினும், 2024ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 7.2 சதவீதம் அதிகரித்துள்ளது. ரூபாய் மதிப்பில், ஒப்பிடும்போது, கடந்த ஜன., ஏற்றுமதி 1.2 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்திய ரூபாய் மதிப்பில், நடப்பு நிதியாண்டின், ஏப். முதல் ஜன. வரை, ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி, 1.15 லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், 5.8 சதவீதம் அதிகரித்துள்ளது. அமெரிக்க வரி உயர்வு மற்றும் ஏற்றுமதி பாதிப்புகளால், ஜன., மாத ஏற்றுமதியில் வளர்ச்சி குறைந்துள்ளது.

அமெரிக்க வாடிக்கையாளரை தக்கவைக்க, திருப்பூர் ஏற்றுமதியாளர், 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கினர். இந்தியா, 37 நாடுகளுடன் ஏற்படுத்தியுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள், ஏற்றுமதி விரிவாக்கத்திற்கு வாய்ப்பாக இருக்கும். குறு, சிறு தொழில்கள் வளர்ச்சிக்கு இடையூறாக, வங்கி சேவைகள், ஏற்றுமதிநிதி தொடர்பான நடைமுறைகளில், பல தடைகள் நிலவுகின்றன.

குறு, சிறு மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்களுக்கு, பிரத்யேக ஏற்றுமதி கொள்கை வடிவமைக்க வேண்டும். குறைந்த வட்டி விகிதத்தில் நிதி அணுகலை மேம்படுத்த, சிறப்பு வட்டி சலுகை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஏற்றுமதியாளருக்கான, வட்டி சமன்படுத்தும் திட்டத்தில், 50 லட்சம் உச்சவரம்பை நீக்கி, 2.75 சதவீத வட்டி மானியத்தை, 5 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். அப்போதுதான், இந்திய ஆயத்த ஆடைத்துறை வலுவாகும்; குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையில் நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கி முன்னேறும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us