/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பல்கலை கபடி போட்டி கல்லுாரி அணிகள் அபாரம்
/
பல்கலை கபடி போட்டி கல்லுாரி அணிகள் அபாரம்
ADDED : செப் 29, 2024 02:16 AM

திருப்பூர்: பாரதியார் பல்கலை அளவிலான கபடி போட்டி, காங்கயம் இன்ஸ்டிடியூட் ஆப் காமர்ஸ் கல்லுாரியில் நடந்தது.
திருப்பூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் சுரேஷ் குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில் அரசன், காங்கயம் வட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மாயவன், முத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் செந்தில் ஆதிபன், காங்கயம் கல்வி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வெங்கடேஷ், காங்கயம் இன்ஸ்டிடியூட் ஆப் காமர்ஸ் கல்லுாரி முதல்வர் சுரேஷ் ஆகியோர் பங்கேற்று, போட்டிகளை துவக்கி வைத்தனர்.
மொத்தம், 20 அணிகள் பங்கேற்றன. முதலிடத்தை ஈரோடு கலை அறிவியல் கல்லுாரி பெற்றது. காமதேனு கலை அறிவியல் கல்லுாரி இரண்டாமிடம், காங்கயம் இன்ஸ்டிடியூட் ஆப் காமர்ஸ் கல்லுாரி மூன்றாமிடம், பாரதிதாசன் கலை கல்லுாரி நான்காமிடம் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு திருப்பூர் மாவட்ட கபடி கழக தலைவர் ஜெயசித்ரா சண்முகம், பரிசு வழங்கினார். காங்கயம் கல்விக்குழும தலைவர் ராமலிங்கம், செயலாளர் வெங்கடாசலம், தாளாளர் ஆனந்த வடிவேல், பொருளாளர் பாலசுப்ரமணியம் ஆகியோர் வெற்றி பெற்ற அணி வீரர்களை பாராட்டினர்.
----
பாரதியார் பல்கலை அளவிலான கபடி போட்டியில், வெற்றி பெற்ற ஈரோடு கல்லுாரி அணிக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் பரிசளிக்கப்பட்டது.