/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வீரகாளியம்மன் கோவில் தேர்த்திருவிழா
/
வீரகாளியம்மன் கோவில் தேர்த்திருவிழா
ADDED : ஜன 20, 2024 02:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;காங்கயம், சிவன்மலையில் வீரகாளியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா நடந்தது.
சிவன்மலையில் உள்ள சுப்ரமணியசுவாமி கோவிலின் தைப்பூச தேர்த்திருவிழா, கடந்த 17ம் தேதி, மலையடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதையொட்டி, வீரகாளியம்மன் கோவில் தேர்த்திருவீதியுலா நேற்று நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளிய அம்மன், மலையடிவாரம், பெரிய வீதி பவனி வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சிவன்மலை கோவில் கொடி மரத்தில் இன்று பகல் 12:00 மணிக்கு விநாயகர் வழிபாடு நடத்தி, திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. வரும், 26, 27, 28ம் தேதிகளில், தைப்பூச தேரோட்டம் நடைபெறுகிறது.