தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ காய்கறி விலை குறைகிறது

 காய்கறி விலை குறைகிறது

 காய்கறி விலை குறைகிறது


ADDED : பிப் 08, 2026 05:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2026 05:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: நடப்பு வாரம் கத்தரிக்காய், வெண்டைக்காய், புடலங்காய், கொத்தவரங்காய், பீர்க்கன்காய், பாகற்காய் விலையில் மாற்றமில்லை.

குளிர் குறைந்து வெயில் பதிவாக துவங்கியுள்ளதால், பூக்கள் உதிர்வதும், விளைச்சலும் சற்று குறைந்துள்ளது. இதனால், பந்தல் காய்கறியான அவரை வரத்து குறைந்து, கிலோவுக்கு, 20 ரூபாய் விலை உயர்ந்து, 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

வரத்து அதிகரிப்பால், 3வது வாரமாக தொடர்ந்து தக்காளி விலை சரிவை சந்தித்துள்ளது. நேற்று கிலோ, 12 ரூபாய்க்கு விற்கப்பட்டது. விற்பனை குறைவாக உள்ளதால், விரைவில் விலை ஒற்றை இலக்கத்துக்கு வருமென வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அதேநேரம், எலுமிச்சை விலைநடப்பு வாரமும் கிலோவுக்கு பத்து ரூபாய் குறைந்து, கிலோ, 50 ரூபாயாக உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் இருந்து தொய்வின்றி மலை காய்கறிகள் மார்க்கெட்டுக்கு வருவதால், கேரட் விலை குறைந்து கிலோ, 30 ரூபாய்க்கும், பீன்ஸ், 50 ரூபாய்க்கும் விற்பனையானது.

திருப்பூர் தெற்கு உழவர் சந்தையில் நேற்றைய விலை(கிலோவில்):

தக்காளி - 25, கத்தரிக்காய் - 30 ரூபாய், வெண்டை - 60, மிளகாய் - 45, புடலங்காய் - 40, அவரை - 70, கொத்தவரை - 40, பீர்க்கன் - 60, சுரைக்காய் - 15, பாகற்காய் - 60, முள்ளங்கி - 20, வாழைக்காய் - 30, சேனைக்கிழங்கு - 40, மரவள்ளி - 30, எலுமிச்சை - 50, சின்ன வெங்காயம் - 40, பெரிய வெங்காயம் - 25, உருளை - 40, முட்டைகோஸ் - 20, காரட் - 30, பீட்ருட் - 35, பீன்ஸ் - 50, காலிபிளவர் - 30, மேரக்காய் - 15, இஞ்சி - 60 ரூபாய்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us