/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் வடக்கு தெற்கு உழவர் சந்தைகளில் கடந்த ஒரு மாதத்தில் காய்கறி விற்பனை ரூ.13.18 கோடி!
/
திருப்பூர் வடக்கு தெற்கு உழவர் சந்தைகளில் கடந்த ஒரு மாதத்தில் காய்கறி விற்பனை ரூ.13.18 கோடி!
திருப்பூர் வடக்கு தெற்கு உழவர் சந்தைகளில் கடந்த ஒரு மாதத்தில் காய்கறி விற்பனை ரூ.13.18 கோடி!
திருப்பூர் வடக்கு தெற்கு உழவர் சந்தைகளில் கடந்த ஒரு மாதத்தில் காய்கறி விற்பனை ரூ.13.18 கோடி!
ADDED : ஜன 02, 2026 05:39 AM

திருப்பூர்: திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு உழவர் சந்தையில் கடந்த ஒரு (டிச.) மாதத்தில், 13.18 கோடி ரூபாய்க்கு காய்கறி விற்பனையானது.
திருப்பூர், தென்னம் பாளையத்தில் செயல்படும், தெற்கு உழவர் சந்தையில், நவ. மாதம், 2,172 மெ.டன் காய்கறி விற்பனையானது. டிச. மாதம் 2,243 மெ.டன் காய்கறி விற்பனையாகி உள்ளது. காய்கறிகளை வாங்கி செல்ல, 1.31, லட்சம் வாடிக்கையாளர்களும், விவசாயிகள், 7,238 பேரும் வருகை தந்தனர். நவம்பர் மாதம் ஒன்பது கோடிக்கு காய்கறி விற்ற நிலையில், டிச. மாதம், 9.93 கோடிக்கு காய்கறி விற்றுள்ளது.
திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள, வடக்கு உழவர் சந்தை உள்ளது. 3,048 விவசாயிகள், 760 டன் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். இவற்றை வாங்கிச்செல்ல, 95 ஆயிரத்து, 580 வாடிக்கையாளர்கள் வந்துள்ளனர்; 3.25 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
திருப்பூர் தெற்கில், 9.93 கோடி, வடக்கில், 3.25 கோடி சேர்த்து, மொத்தம், 13.18 கோடி ரூபாய்க்கு காய்கறி விற்பனையாகியுள்ளது.
உழவர் சந்தை அலுவலர்கள் கூறியதாவது:
டிச. துவக்கத்தில் குளிரின் தாக்கம் அதிமாக இருந்ததால், காய்கறி வரத்து குறைந்து, விலை அதிகமாகியது. மார்கழி பிறப்புக்கு பின் காய்கறிகளை வாங்கி செல்ல அதிகளவில் வாடிக்கையாளர் குவிந்தனர். குறிப்பாக, சபரிமலை சீசன் காரணமாக காய்கறி விற்பனை அதிகமாகியது. தக்காளி விலை உயர்வால், வருவாய் கூடியது.
வரத்து சீராகிய நிலையில், விற்பனையும் அதிகரித்ததால், தெற்கு உழவர் சந்தையில், ஒன்பது கோடியில் இருந்து, 9.93 கோடி ரூபாயும், வடக்கில் வருவாய், 3.21 கோடியில் இருந்து, 3.25 கோடியும் உயர்ந்துள்ளது. இரண்டு சந்தையும் சேர்த்து கடந்த நவ. மாதம், 12 கோடி வர்த்தகம் நடந்தது. டிச. மாதம் 1.13 கோடி கூடுதல் வருவாய் கிடைத்ததன் மூலம், 13.18 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

