ADDED : பிப் 10, 2024 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கயம் ஒன்றியம் நத்தக்காடையூரில் இரு சக்கர வாகன பார்க்கிங் மையம் உள்ளது.
காங்கயம் ஒன்றியத்துக்குச் சொந்தமான இந்த வாகன ஸ்டாண்ட் உரிமைக்கு 2024-25ம் நிதியாண்டுக்கான ஏலம் காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. பி.டி.ஓ., விமலா தேவி ஏலத்தை நடத்தினார். ஆறு பேர் கலந்து கொண்டனர். கடந்தாண்டு இது 4.69 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. இந்நிலையில் நேற்று நடந்த ஏலத்தில் நத்தக்காடையூரைச் சேர்ந்த பிரபு என்பவர் 4.70 லட்சம் ரூபாய்க்கு ஏலம் கோரினார். பிறர் மேற்கொண்டு ஏலம் கோரவில்லை. ஆனால், விதிகளின்படி, ஏலம் எடுத்த பிரபு அதற்கான தொகையை செலுத்தவில்லை. இததையடுத்து, நேற்று நடைபெற்ற ஏலம் ரத்து செய்யப்படுவதாகவும், மறு ஏலம் பின்னர் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.