/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை கொட்ட வந்த வாகனங்கள் சிறைபிடிப்பு
/
குப்பை கொட்ட வந்த வாகனங்கள் சிறைபிடிப்பு
ADDED : ஜன 24, 2026 04:41 AM

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி, 34வது வார்டு ஊத்துக்குளி ரோடு, எஸ்.ஆர்.சி. மில் பாலம் அருகே குப்பை கொட்டப்பட்டு வந்தது.
அதில், இரு நாள் முன் தீ வைக்கப்பட்டதில், நேற்று முன்தினம் காலை வரை தீ எரிந்தும், கடும் புகையும் கிளம்பியதால், தனியார் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இதனையறிந்து, அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், சுகாதாரப் பிரிவினர், குப்பையை அகற்றி இடத்தை சுத்தம் செய்தனர்.
நேற்று காலை மீண்டும் குப்பை கழிவுகளுடன் மூன்று வாகனம் வந்தது. இதனை மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் சிறைப்பிடித்தனர். இதனால், அப்பகுதிக்கு சென்ற அதிகாரிகள், வேறிடத்தில் கொட்ட வாகனங்கள் திரும்பி செல்லுமாறு அறிவுறுத்தி, மீண்டும் குப்பை கொட்டப்படாது என்றும் உறுதியளித்தனர்.

