/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரோட்டை ஆக்கிரமிக்கும் வாகனங்கள்; விபத்து அதிகரிப்பால் மக்கள் அச்சம்
/
ரோட்டை ஆக்கிரமிக்கும் வாகனங்கள்; விபத்து அதிகரிப்பால் மக்கள் அச்சம்
ரோட்டை ஆக்கிரமிக்கும் வாகனங்கள்; விபத்து அதிகரிப்பால் மக்கள் அச்சம்
ரோட்டை ஆக்கிரமிக்கும் வாகனங்கள்; விபத்து அதிகரிப்பால் மக்கள் அச்சம்
ADDED : பிப் 23, 2024 11:33 PM
உடுமலை;உடுமலையில், பிரதான ரோடுகளை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களையும் அகற்ற, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலையில், பிரதான ரோடுகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்து வருகிறது.
இருப்பினும், பிரதான ரோடுகளை ஆக்கிரமித்து, நிறுத்தப்படும் வாகனங்களால், தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
பழநி ரோட்டில், பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப்பணி நடக்கும் பகுதி மற்றும் பழநி செல்லும் வழித்தடத்தில், கிரேன், பொக்லைன் மற்றும் லாரிகள் அதிகளவு ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.
அதே போல், பஸ் ஸ்டாண்ட், சந்தை பகுதி, பைபாஸ் ரோடு, காந்திநகர், ரயில்வே ஸ்டேஷன் என அனைத்து ரோடுகளிலும், மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளில், நுாற்றுக்கணக்கான வாடகை வாகனங்கள் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.
தாராபுரம் ரோடு, தளி ரோடு, திருப்பூர் ரோடு , அனுஷம் ரோடு, ஐஸ்வர்யா நகர் ரோடு சந்திப்பு, ரவுண்டானா என பெரும்பாலான ரோடுகளில், வாடகை வாகனங்கள் நிறுத்தும் மையங்களாக மாற்றப்பட்டுள்ளது.
இதனால், ரோடுகள் குறுகலாகி, விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
நகராட்சி சார்பில், வாகனங்கள் நிறுத்தும் மையங்கள் தனியாக ஒதுக்கீடு செய்து, சுற்றுலா வாகனங்கள், சரக்கு வாகனங்கள், கனரக இயந்திரங்கள் நகர பகுதிகளுக்குள் வந்து நெரிசல் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.