/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நகர ரோடுகளில் வாகனங்கள் 'பார்க்கிங்': கண்டுகொள்ளாத போலீசார்
/
நகர ரோடுகளில் வாகனங்கள் 'பார்க்கிங்': கண்டுகொள்ளாத போலீசார்
நகர ரோடுகளில் வாகனங்கள் 'பார்க்கிங்': கண்டுகொள்ளாத போலீசார்
நகர ரோடுகளில் வாகனங்கள் 'பார்க்கிங்': கண்டுகொள்ளாத போலீசார்
ADDED : ஜூன் 10, 2025 08:42 PM
உடுமலை:
உடுமலையில், பிரதான ரோடுகளை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
உடுமலை தளி ரோடு, நகரின் பிரதான போக்குவரத்து ரோடுகளாக, பொள்ளாச்சி, பழநி, தாராபுரம், திருப்பூர் மற்றும் தளி ரோடுகள் உள்ளன.
பஸ் ஸ்டாண்டிலிருந்து பொள்ளாச்சி செல்லும் ரோட்டில், இரு புறமும் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
ஸ்வீட் கடை, பேக்கரி, வணிக வளாகங்கள், கடைகளில் உரிய 'பார்க்கிங்' வசதி இல்லாத நிலையில், அங்கு வரும் மக்கள் ரோடுகளை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துகின்றனர்.
அதே போல், சீனிவாசா வீதி சந்திப்பு, சத்திரம் வீதி சந்திப்பு என பிரதான ரோடுகளில் அதிகமான வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. அரசு மருத்துவமனை, தாலுகா அலுவலகம் சந்திப்பு ரோடு, நுாலகம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பகுதிகளில், ரோட்டின் இரு புறமும் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது.
இந்த ரோட்டின் அருகிலேயே குட்டைத்திடல் அமைந்துள்ளதோடு, வாகனங்களை இங்கு நிறுத்தி விட்டு வருமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், கார்கள் பெரும்பாலும் ரோட்டை ஆக்கிரமித்தே நிறுத்தப்படுகிறது.
இதனால், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் அதிகரித்து வருகிறது. ரோடுகளை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுவதால், நகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் நிரந்தரமாக உள்ள நிலையில், இதனை போக்குவரத்து போலீசார் கண்டுகொள்வதில்லை.
புறநகர பகுதிகளில், வாகன தணிக்கை, அபராதம், வசூல் என கவனம் செலுத்துகின்றனர். எனவே, விதிமீறி ரோடுகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கவும், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளுக்கு தீர்வு காணவும் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.