sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 'நடைச்சீட்டு இன்றி கனிமம் ஏற்றிச்செல்லும் வாகனங்கள்'

/

 'நடைச்சீட்டு இன்றி கனிமம் ஏற்றிச்செல்லும் வாகனங்கள்'

 'நடைச்சீட்டு இன்றி கனிமம் ஏற்றிச்செல்லும் வாகனங்கள்'

 'நடைச்சீட்டு இன்றி கனிமம் ஏற்றிச்செல்லும் வாகனங்கள்'


ADDED : பிப் 17, 2026 05:10 AM

Google News

ADDED : பிப் 17, 2026 05:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில், கனிமவளத்துறை சார்ந்து, இரண்டு மனுக்கள் அளிக்கப்பட்டன.

திருப்பூர் தெற்கு தாலுகா, பெருந்தொழுவு ஊர் பொதுமக்கள்:

பெருந்தொழுவு கிராமத்தில், மூன்று கல்குவாரிகள் அமைப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம், கடந்த, 10ம் தேதி நடைபெற்றது. குவாரிக்கு 300 மீ. சுற்றளவில், வீட்டுமனைகள் உள்ளன. உயர் மின் கோபுர இணைப்பு லைன்கள் செல்கின்றன. குவாரியை ஒட்டி 50 மீட்டர் சுற்றளவுக்குள், போர்வெல், மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைந்துள்ளன. ஆகவே, கல்குவாரிக்கு அனுமதி அளிக்க கூடாது.

உ.உ.க. மாவட்ட செயலாளர் முத்துரத்தினம்:

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2025, ஜூன் 9ம் தேதி முதல், எம்.சாண்ட், பி.சாண்ட் மற்றும் ஜல்லி உள்ளிட்ட கனிமங்கள் எடுத்துச்செல்ல, மின்னணு நடைச்சீட்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நடைச்சீட்டு இல்லாமலேயே முறைகேடாக கனிமங்கள் எடுத்துச்செல்வதால், அரசுக்கு தினந்தோறும் பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இது தொடர்பாக, கடந்த, 2ம் தேதி குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நடைச்சீட்டு இல்லாமல் கனிமம் ஏற்றிச்செல்லும் வாகனங்களை கைப்பற்றி, அபராதம் விதிக்க, கனிமவளத்துறை உதவி இயக்குனருக்கு கலெக்டர் உத்தரவிட வேண்டும்.






      Dinamalar
      Follow us