/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநகரில் 2ம் நாளாக வேல் வாகனம் வலம்
/
மாநகரில் 2ம் நாளாக வேல் வாகனம் வலம்
ADDED : டிச 16, 2024 12:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், வேல் வழிபாடு நிகழ்ச்சி கடந்த மாதம் துவங்கியது. கொங்கு மண்டலத்தின் ஏழு திருத்தலங்களில் வைத்து பூஜிக்கப்பட்ட மங்கள வேல், வாகனத்தில் வைத்து, திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் மக்கள் தரிசனத்துக்காக கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, திருப்பூரில் நேற்று முன்தினம் மக்கள் தரிசனத்துக்காக மங்கள வேலுடன் கூடிய வாகனம் வலம் வர துவங்கியது. நேற்று இரண்டாம் நாளாக, அனுப்பர்பாளையம், ஸ்ரீ நகர், ஓம் சக்தி கோவில் ரோடு, வாலிபாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் வேல் வாகனம் வலம் வந்தது. தரிசனம் செய்த மக்கள், வேலுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.