/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வளர்ப்பு நாய்க்கு 'மைக்ரோசிப்' கால்நடை துறையினர் தகவல்
/
வளர்ப்பு நாய்க்கு 'மைக்ரோசிப்' கால்நடை துறையினர் தகவல்
வளர்ப்பு நாய்க்கு 'மைக்ரோசிப்' கால்நடை துறையினர் தகவல்
வளர்ப்பு நாய்க்கு 'மைக்ரோசிப்' கால்நடை துறையினர் தகவல்
ADDED : ஜன 02, 2026 05:45 AM
பல்லடம்: வளர்ப்பு நாய்களுக்கு 'மைக்ரோசிப்' பொருத்தும் முறை விரைவில் திருப்பூர் மாவட்டத்திலும் அமலுக்கு வர உள்ளதாக, கால்நடை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாய்களை அடையாளம் காணும் வகையில், தற்போது, அவற்றுக்கு 'மைக்ரோசிப்' பொருத்தும் முறை சென்னையில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
இதன் வாயிலாக, நாய்களின் வயது, எடை, நோய் தொற்று பாதிப்பு, சிகிச்சை விவரங்கள், தடுப்பூசி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும். சென்னை மாநகரப் பகுதிகளில் உள்ள வளர்ப்பு நாய்களுக்கு 'மைக்ரோசிப்' பொருத்தும் முறை சமீபத்தில் அமல்படுத்தப்பட்டது. அதேபோல், திருப்பூர் மாவட்டத்திலும், விரைவில் மைக்ரோ சிப் பொருத்தும் முறை அமலுக்கு வர உள்ளதாக, கால்நடை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் சந்திரன் கூறுகையில், ''மைக்ரோசிப் பொருத்துவதன் வாயிலாக, நாய்கள் குறித்த விவரங்களை இதன் மூலம் அறிவதுடன், நாய்கள் காணாமல் போனாலும் கண்டுபிடிக்க முடியும். காவல்துறை பயன்படுத்தி வரும் நாய்களுக்கு இந்த மைக்ரோ சிப் பொருத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் இந்த தொழில்நுட்பம் முதல் கட்டமாக கொண்டுவரப்பட்டுள்ளது. விரைவில், திருப்பூர் மாவட்டத்திலும், கொண்டுவரப்பட உள்ளது. இதற்காக பிரத்யேக டாக்டர்கள் நியமிக்கப்பட உள்ளனர்,'' என்றார்.

