/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
7 வண்ணங்களில் வேட்டி - சட்டை; 'ராம்ராஜ் காட்டன்' அசத்தல்
/
7 வண்ணங்களில் வேட்டி - சட்டை; 'ராம்ராஜ் காட்டன்' அசத்தல்
7 வண்ணங்களில் வேட்டி - சட்டை; 'ராம்ராஜ் காட்டன்' அசத்தல்
7 வண்ணங்களில் வேட்டி - சட்டை; 'ராம்ராஜ் காட்டன்' அசத்தல்
ADDED : அக் 25, 2024 10:45 PM

திருப்பூர் : வேட்டி, சட்டை உற்பத்தி மற்றும் விற்பனையில் பிரபலமான ராம்ராஜ் காட்டன் நிறுவனம், நடப்பாண்டு தீபாவளி முன்னிட்டு ஏழு வண்ணங்களில், டிஸ்யூ வேட்டி, சட்டை ரகங்களை விற்பனை செய்கிறது.
இதுகுறித்து, ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் கூறியதாவது:
வேட்டி என்பது முதல் மரியாதைக்கான ஆடை என்பதை அனைத்து தரப்பினர் மத்தியிலும் ஆழமாக பதிய வைத்ததில் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் பங்கு மிக அதிகம். முதல் கட்டமாக, 8 வகையில் துவங்கிய வேட்டி தற்போது, 4 ஆயிரம் விதமாக உள்ளது.
பல்வேறு வகையில் மக்கள் மனதில் இடம் பெற்ற ராம்ராஜ் காட்டன் தயாரிப்பு ஆண்டுதோறும் புதிய வரவை மக்கள் மத்தியில் எதிர்பார்க்க வைத்துள்ளது. அவ்வகையில் நடப்பாண்டில் டிஸ்யூ வேட்டி சட்டைகளை அறிமுகம் செய்துள்ளோம். இவை தற்போது ஏழு வண்ணங்களில் கிடைக்கிறது.
முதல் கட்டமாக கோல்ட், சில்வர் மற்றும் காப்பர் ஆகிய மூன்று வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது வாடிக்கையாளர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப மேலும் நான்கு வண்ணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரபல துணி கடைகளிலும், ராம்ராஜ் விற்பனை மையங்களிலும் இது தற்போது விற்பனையாகிறது. எதிர்பாராத அளவுக்கு வாடிக்கையாளர் மத்தியில் இது டிரெண்ட்டிங் ஆக மாறி அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.