/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொங்கல் பண்டிகைக்கு வேட்டி சேலை ஒதுக்கீடு
/
பொங்கல் பண்டிகைக்கு வேட்டி சேலை ஒதுக்கீடு
ADDED : ஜன 11, 2024 10:48 PM
உடுமலை;பொங்கலை முன்னிட்டு, ஏழை எளிய மக்களுக்கு வழங்குவதற்காக, திருப்பூர் மாவட்டத்துக்கு 6.15 லட்சம் சேலை: 5.95 லட்சம் வேட்டி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மக்களுக்கு, தமிழக அரசு சார்பில் இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டு வருகிறது.
மாவட்டம் வாரியாக தேவைப்படும், வேட்டி சேலை எண்ணிக்கை விபரங்கள் பெறப்பட்டு, ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு வழங்குவதற்காக, திருப்பூர் மாவட்டத்துக்கு 6 லட்சத்து, 15 ஆயிரத்து 55 சேலை; 5 லட்சத்து 95 ஆயிரத்து 341 வேட்டி ஒதுக்கீடு செய்துள்ளது.
அரசு ஒதுக்கீடு செய்த, வேட்டி சேலைகள் திருப்பூருக்கு தருவிக்கப்பட்டு, ரேஷன் கடைகள்தோறும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வினியோகத்துடன், ஏழை குடும்பங்களுக்கு வேட்டி சேலையும் வழங்கப்படுகிறது.