/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மே.வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலாக்க வி.ெஹச்.பி., கடிதம்
/
மே.வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலாக்க வி.ெஹச்.பி., கடிதம்
மே.வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலாக்க வி.ெஹச்.பி., கடிதம்
மே.வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலாக்க வி.ெஹச்.பி., கடிதம்
ADDED : ஏப் 21, 2025 11:13 PM
திருப்பூர்::
விஷ்வ ஹிந்து பரிஷத் திருப்பூர் மாவட்ட செயலாளர் ராஜேஷ், நேற்று கலெக்டர் கிறிஸ்துராஜ் மூலம், ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கடிதம் அனுப்பினார்.
கடிதத்தில் கூறியிருப்பதாவது: வக்ப் சட்டம் எதிர்ப்பு என்ற பெயரில், கடந்த 11ல் மேற்கு வங்கத்தில் நடத்தப்பட்ட வன்முறைகள், ஹிந்துக்கள் மீதான தாக்குதல்களாகும். 200க்கும் மேற்பட்ட வீடுகளையும், வணிக நிறுவனங்களையும் எரித்து சேதப்படுத்தியுள்ளனர். நுாற்றுக்கணக்கான இந்துக்கள் படுகாயமடைந்துள்ளனர். பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். மம்தா அரசு, வாக்கு வங்கியையும், தனது அரசையும் பாதுகாக்க, மேற்கு வங்கத்தில் கூட்டாட்சி கட்டமைப்பை அழிக்கவும், எந்த எல்லைக்கும் செல்ல முடிவு செய்துவிட்டது. மேற்கு வங்கத்தில் உடனடியாக ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தவேண்டும்.