/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் தொழில்துறைக்கு வலிமை சேர்ப்பார் துணை ஜனாதிபதி சி.பி.ஆர்.
/
திருப்பூர் தொழில்துறைக்கு வலிமை சேர்ப்பார் துணை ஜனாதிபதி சி.பி.ஆர்.
திருப்பூர் தொழில்துறைக்கு வலிமை சேர்ப்பார் துணை ஜனாதிபதி சி.பி.ஆர்.
திருப்பூர் தொழில்துறைக்கு வலிமை சேர்ப்பார் துணை ஜனாதிபதி சி.பி.ஆர்.
ADDED : அக் 30, 2025 01:02 AM
திருப்பூர்: ''திருப்பூரை சேர்ந்தவர் துணை ஜனாதிபதியாகி, மத்திய அரசில் அரணாக இருப்பது, திருப்பூர் தொழில்துறைக்கு வலிமை சேர்க்கும்,'' என, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க கவுரவ தலைவர் சக்திவேல் பேசினார்.
திருப்பூர் பீப்பிள்ஸ் போரம், தொழில் அமைப்புகள் சார்பில், துணை ஜனாதிபதி சி.பி.ராதா கிருஷ்ணனுக்கு பாராட்டு விழா திருப்பூரில் நேற்று நடந்தது.
தொழில்துறைக்கு வலிமை திருப்பூர் மக்கள் சார்பில், ஏற்றுமதியாளர்கள் சங்க கவுரவ தலைவர் சக்திவேல், நினைவு பரிசு வழங்கி பேசியதாவது:
திருப்பூரை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றதை கொண்டாடும் நிகழ்வு, திருப்பூர் மாநகரின் பெருமையை பிரதிபலிப்பதாக இருக்கிறது. இது, தேச வரலாற்றில் பெருமை மிகு அத்தியாயம். எத்தகைய பதவிகள் வந்தாலும், அவரின் பணிவு பேற்றுதலுக்குரியது. இளம் வயதில் இருந்தே, தலைமைத்துவம், தொலைநோக்கு பார்வை, தன்னம்பிக்கை, முயற்சி ஆகிய குணங்களால் சிறந்து விளங்குகிறார். எளிமையும், ஒழுக்கமும், தன்னம்பிக்கையும், பொது வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைந் துள்ளது.
நாடு முழுவதும் மதிக்கப்படும் அவர், தன்னை உருவாக்கிய திருப்பூர் நகரம் மற்றும் நகர மக்களுடன் ஆழமாக இணைந்திருக்கிறார். திருப்பூரை சேர்ந்தவர் துணை ஜனாதிபதியாகி, மத்திய அரசில் அரணாக இருப்பது, திருப்பூர் தொழில்துறைக்கு வலிமை சேர்க்கும். இவ்வாறு, அவர் பேசினார்.
பெருமை கொள்ளும் தொழில்துறை தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) தலைவர் சண்முகசுந்தரம் பேசுகையில்,''திருப்பூரில் தயாரிக்கும் ஆடை உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றிருப்பது போல், சி.பி.ராதாகிருஷ்ணனும், படிப்படியாக உயர்ந்து, துணை ஜனாதிபதியாக உயர்ந்து திருப்பூருக்கு சிறப்பு சேர்த்திருக்கிறார். தேசப்பற்று, தெளிந்த பார்வையுடன், படிப்படியாக முன்னேறி, உயர் பதவிக்கு சென்றுள்ளார்,'' என்றார்.

