தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வித்ய விகாஷினி பள்ளி மாணவர்கள் சாதனை

 வித்ய விகாஷினி பள்ளி மாணவர்கள் சாதனை

 வித்ய விகாஷினி பள்ளி மாணவர்கள் சாதனை


ADDED : மே 21, 2026 08:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 21, 2026 08:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூர் - காங்கயம் ரோடு, ஜெய் நகரிலுள்ள வித்ய விகாஷினிபள்ளியில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 155 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இப்பள்ளி மாணவர் மதிவர்ஷன், 497 மதிப்பெண் பெற்று மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்துள்ளார். 494 மதிப்பெண்ணுடன் அபிநந்தனா பள்ளியில் இரண்டாமிடம்; 493 மதிப்பெண் பெற்று ஸ்ரீநிதி, கனகதாரா, சாருநேத்ரா ஆகியோர் மூன்றாமிடம் பெற்றுள்ளனர்.

பள்ளியில், 490க்கு மேல் 12 பேர், 450 முதல் 489 வரை 50 பேர் மதிப்பெண் பெற்றுள்ளனர். கணிதம் - 4, அறிவியல் - 6, சமூக அறிவியல் - 7 பேர் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளனர். அபிநந்தனா, சாருநேத்ரா, சுவாசிகா ஆகிய மூவரும், கல்வியில் மட்டுமின்றி கைப்பந்து போட்டியில் பங்கேற்று, பார்ம் - 4 சான்றிதழ் பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாணவி சம்யுக்தா, 594 மதிப்பெண்ணுடன் முதலிடம் பிடித்தார். பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்களையும், கற்பித்த ஆசிரியர்களையும், பள்ளி தாளாளர் தர்மலிங்கம், நிர்வாக அதிகாரி விஜயலட்சுமி, செயலாளர் நகுலன் பிரணவ், துணை நிர்வாக அதிகாரி சப்னா ராகவி ஆகியோர் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us