/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குற்றம் தடுக்க தீவிர ரோந்து: மா.கம்யூ., வேண்டுகோள்
/
குற்றம் தடுக்க தீவிர ரோந்து: மா.கம்யூ., வேண்டுகோள்
குற்றம் தடுக்க தீவிர ரோந்து: மா.கம்யூ., வேண்டுகோள்
குற்றம் தடுக்க தீவிர ரோந்து: மா.கம்யூ., வேண்டுகோள்
ADDED : ஜன 06, 2024 11:59 PM

அனுப்பர்பாளையம்:திருப்பூர் மாநகராட்சி, வாவிபாளையம் ஜெ.ஜெ நகரை சேர்ந்த சேகர், 45, என்பவர் கடந்த 2ம் தேதி மூன்று பேர் கொண்ட கும்பலால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
கொலையில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீசார், தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொலையை கண்டித்தும், போதை பொருட்கள் விற்பனை உள்ளிட்ட சமுக விரோத செயல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வாவிபாளையம் பகுதி மக்கள் மற்றும் மா.கம்யூ.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தனர்.
போலீசார் சமாதானம் செய்ததால், தெருமுனை கூட்டமாக வாவிபாளையம் பஸ் ஸ்டாப் அருகில் நடத்தினர். கூட்டத்தில், மா. கம்யூ., மாநில குழு உறுப்பினர் காமராஜ், வடக்கு ஒன்றிய செயலாளர் காளியப்பன், மாவட்ட குழு உறுப்பினர் சிகாமணி ஆகியோர் பேசினர்.
சேகர், குடும்பத்திற்கு உரிய நிவாரணம் மற்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். நெருப்பெரிச்சல் பகுதியை மையமாக வைத்து, புற காவல் நிலைய அமைக்க வேண்டும். போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.