UPDATED : மே 10, 2026 09:36 PM
ADDED : மே 10, 2026 09:04 PM
மின்சேமிப்பு; பாதுகாப்பு
200 யூனிட் வரை கரன்ட் பில் கிடையாதுங்கறது பெரிய விஷயம்... அந்த காசு மிச்சமானா ஒரு சேமிப்பா இருக்கும். சிங்கப் பெண் படை வர்றதால நாங்க பயமில்லாம வேலைக்கு போயிட்டு வருவோம். போதைப்பொருள் தடுப்பு திட்டத்தை கரெக்டா செஞ்சா இளைஞர்கள் தப்பிப்பாங்க.
- விக்டோரியா, தனியார் நிறுவன ஊழியர், எம்.எஸ். நகர்.
பெண்களுக்கு நிம்மதி
கரன்ட் பில் சலுகை எல்லாருக்கும் கிடைக்கிறது ரொம்ப சந்தோஷம்; அந்த காசை என் குழந்தையோட படிப்புக்கு செலவு பண்ணுவேன். இப்ப இருக்குற பயமான சூழல்ல பெண்களுக்கு பாதுகாப்பு தர்ற திட்டத்தை கண்டிப்பா வரவேற்கிறோம். போதை ஒழிப்பு திட்டத்தை அறிவிப்போட நிப்பாட்டாம வேகமா செயல்படுத்தணும்.
- ரேணுகாதேவி, இல்லத்தரசி, பெருமாநல்லுார்.
சுதந்திரம்; விடியல்
பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமை மாறி, இந்த சிங்கப் பெண் படையால தைரியமும் சுயமரியாதையும் கிடைக்கும்னு நம்புறோம். ஏழை குடும்பங்களுக்கு கரன்ட் பில் சலுகை பெரிய வரப்பிரசாதம், ஒரு நல்ல சேமிப்பா அமையும். போதை ஒழிப்பு திட்டத்தால தடம் மாறுற இளைஞர்கள் இனிமே காப்பாற்றப்படுவாங்க.
- ஜானகி, இல்லத்தரசி, அனுப்பர்பாளையம்.
