தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மதுவிலக்கு இலக்கு

மதுவிலக்கு இலக்கு

மதுவிலக்கு இலக்கு


UPDATED : மே 10, 2026 09:37 PM

ADDED : மே 10, 2026 09:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 10, 2026 09:37 PM ADDED : மே 10, 2026 09:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுவிலக்கு இலக்கு

விஜய் அறிவிச்ச திட்டங்கள் எல்லாம் சூப்பர்... மெயினா இந்த போதைப்பொருள் கலாசாரத்தை வேரோட அழிக்கணும். அப்படியே மதுக்கடைகளையும் கொஞ்சம் கொஞ்சமா மூடி முழு மதுவிலக்கை கொண்டு வரணும். அப்புறம் இந்த விலைவாசி உயர்வையும் கட்டுப்படுத்தினா சாமானிய மக்களுக்கு நிம்மதியா இருக்கும்.

- பூபதி ராஜா, ஸ்டுடியோ, பெத்தாமூச்சிபாளையம்.

நேர்மையான நிர்வாகம்

பெண்கள் பாதுகாப்பு, போதை ஒழிப்பு இதெல்லாம் நல்ல விஷயம். அதே நேரத்துல ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சி அமையணும்ணா. அதிகாரிங்ககிட்டயும் ஆட்சியாளர் கிட்டயும் ஒரு வெளிப்படைத்தன்மை இருக்கணும். இடைத்தரகர் தொந்தரவு இல்லாம, மக்கள் நேரடியா அரசு அலுவலகங்களை அணுகுற மாதிரி எளிமையான ஆட்சி வேணும்.

- சச்சிதானந்தகுமார், வழக்கறிஞர், பலவஞ்சிபாளையம்.

சட்டம் ஒழுங்கு

இலவச மின்சாரம், சிங்கப் பெண் படைன்னு அறிவிச்ச திட்டங்கள் எல்லாமே ரொம்ப அவசியமானதுதான். ஆனா பழைய மாதிரி இல்லாம, சட்டம் ஒழுங்குல ரொம்ப கண்டிப்பா இருக்கணும். எந்த ஊழலும் இல்லாம, பெண்களுக்கு முழு பாதுகாப்பு கிடைக்கிற மாதிரி ஆட்சி நடக்கணும்ங்கறதுதான் எங்களோட எதிர்பார்ப்பு.

- சின்னசாமி, ஜே.சி.பி. ஆபரேட்டர், இச்சிப்பட்டி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us