UPDATED : மே 10, 2026 09:38 PM
ADDED : மே 10, 2026 09:21 PM

வெளிப்படைத்தன்மை
200 யூனிட் இலவச மின்சாரத்துல இருக்குற நிபந்தனைகளால பல குடும்பங்களுக்கு அந்த சலுகை கிடைக்காம போயிடும்ணா. வெள்ளை அறிக்கைங்கறது போன ஆட்சியை குறை சொல்ல மட்டும் இருக்கக்கூடாது; வருஷா வருஷம் கணக்கை தெளிவா காட்டணும். போதைப்பொருள் ஒழிப்புல வெறும் பேச்சு இல்லாம ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் இருந்தாதான் நம்ப முடியும்.
- அருண்குமார், எண்ணெய் மில் உரிமையாளர், தாராபுரம்.
மாற்றத்தின் அடையாளம்
தமிழக அரசியல்ல ஒரு பெரிய மாற்றம் நடந்திருக்கு, இலவச மின்சார திட்டம் ஏழை மக்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும். இன்னைக்கு இருக்கற சூழல்ல பெண்களோட பாதுகாப்பு ரொம்ப முக்கியம், இந்த சிங்கப்பெண் திட்டம் அதை உறுதி செய்யும்னு நம்புறோம். மொத்த அரசு இயந்திரமும் நேர்மையா மாறி, அதோட பலன் மக்களுக்கு கிடைக்கும்போதுதான் இந்த ஆட்சிக்கு உண்மையான வெற்றி.
- ஜோதிபாசு, ஸ்கேட்டிங் பயிற்சியாளர், 15 வேலம்பாளையம்.
ஆணிவேரை அறுங்க!
போதைப்பொருளை ஒழிக்கணும்னா வெறும் சோதனை மட்டும் பத்தாது, அதோட உற்பத்தியையே முடக்கணும். இலவசங்களை அதிகமா கொடுத்து மக்களுக்கு உழைப்பு மேல இருக்குற அக்கறையை குறைச்சிடக்கூடாது. ஒவ்வொரு கவர்மென்ட் ஆபீஸ்லயும் என்ன நடக்குதுங்கற விவரத்தை மக்கள் பார்வைக்கு வச்சாத்தான் அது உண்மையான வெளிப்படையான நிர்வாகம்; சிங்கப்பெண் திட்டம் வரவேற்கத்தக்கது.
- முத்துபாரதி, எழுத்தாளர், ராயபுரம்.
