தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஊழலே மாற்றத்துக்கு காரணம்

ஊழலே மாற்றத்துக்கு காரணம்

ஊழலே மாற்றத்துக்கு காரணம்


UPDATED : மே 06, 2026 06:55 PM

ADDED : மே 06, 2026 06:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 06, 2026 06:55 PM ADDED : மே 06, 2026 06:53 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஊழலே மாற்றத்துக்கு காரணம்

தமிழகத்தில் நீண்ட காலமாக, தி.மு.க. அ.தி.மு.க. கட்சிகளுக்கு, மக்கள் மாறிமாறி வாக்களித்து வருகின்றனர். அரசு பஸ்களில் கட்டணம் அதிகமாகவும், தனியார் பஸ்களில் குறைவாகவும் இருந்த நிலை தற்போது மாறி, அரசு பஸ்களில் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது; இதுபோன்று, விலைவாசி உயர்வும் சாமானிய மக்களை பாதித்திருக்கிறது; விஜய் தலைமையிலான புதிய அரசு, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மக்களுக்கு இலவசம் வழங்குவதை விட, தரமான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். கடந்த கால ஆட்சிகளில் லஞ்சம், ஊழல் அதிகரித்திருந்ததை, அனைத்து தரப்பு மக்களும் உணர்ந்ததன் விளைவு தான், இந்த மாற்றத்துக்கு காரணம்.

-- மணிகண்டன், திருப்பூர்.

----பெண்கள் பாதுகாப்பு முக்கியம்

சமீபகாலமாக அதிகரித்துள்ள குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்தி, அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என்பதே முதன்மையான கோரிக்கை. அரசுப் பள்ளிகளின் தரம் குறைந்து வருவதால், நடுத்தரக் குடும்பத்தினர் கூட தனியார் பள்ளிகளை நோக்கிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சிறு முதலீட்டில் இயங்கிய பல தொழில்கள் மூடப்பட்டு, வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. இலவச பஸ் பயணம் போன்ற திட்டங்களை விட, தரமான கல்வி, மருத்துவம், தொழில் வாய்ப்புமே முக்கியம்.

- ரம்யா, திருப்பூர்.

---

நல்லாட்சி கொடுப்பார்

தமிழக அரசியலில் நீண்ட காலமாக இரண்டு முக்கிய கட்சிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்தன. மற்ற கட்சிகள் பெரிய அளவில் நம்பிக்கையை ஏற்படுத்தத் தவறிய சூழலில், ஒரு மாற்றத்திற்காக மக்கள் காத்திருந்தனர். விஜய் அரசியலுக்கு வந்த நிலையில், அவர் மீதான மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. முந்தைய கட்சிகள் இலவசங்களை அறிவித்தே பழக்கப்படுத்திவிட்டன. விஜய் அறிவித்துள்ள வாக்குறுதிகள், குறிப்பாக பெண்களுக்கான திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்த அம்சங்கள் வரவேற்ப்புக்குரியது. இலவசங்களைத் தாண்டி, நல்லாட்சியைக் கொடுப்பார் என நம்புகிறோம்.

- பாஸ்கரன், திருப்பூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us