தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/புதிய நம்பிக்கை

புதிய நம்பிக்கை

புதிய நம்பிக்கை


UPDATED : மே 06, 2026 06:57 PM

ADDED : மே 06, 2026 06:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 06, 2026 06:57 PM ADDED : மே 06, 2026 06:53 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதிய நம்பிக்கை

திராவிட கட்சிகள்தான் மாறிமாறி ஆளவேண்டும் என்கிற நிலை மாறவேண்டும் என்பதே மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்துவந்தது. விஜயகாந்த் அரசியலுக்கு வந்தபோது, திராவிட கட்சிகள் அவரை தவறாக சித்தரித்துவிட்டன. ஆனால், விஜயின் அரசியல் பிரவேசம், அனைத்துதரப்பு மக்கள் மத்தியிலும் புதிய நம்பிக்கையை அளித்திருக்கிறது. அதுவே பேரைலையாக மாறி, முதல் தேர்தலிலேயே விஜய்க்கு மாபெரும் வெற்றியை அளித்திருக்கிறது. தமிழகத்தில் திராவிட கட்சிகள்தான் ஆட்சி அமைக்கமுடியும்; கடையில் பணம் கொடுத்து வாக்காளரை விலைக்கு வாங்கிவிடலாம் என்கிற நம்பிக்கை உடைக்கப்பட்டிருக்கிறது.

- கோபாலகிருஷ்ணன், அவிநாசி.

லஞ்சம் ஒழிய வேண்டும்

தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய இரண்டு திராவிட கட்சிகளின் செயல்பாட்டின் மீதும் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இரு கட்சிகளுமே தமிழக வளர்ச்சிக்கும், மக்கள் நலனுக்காக எவ்வித நல்லதும் செய்யவில்லை. இருபக்கமும் ஊழல் புரையோடியுள்ளது. குறிப்பாக சட்ட ஒழுங்கு சீர்கெட்டுப்போய்விட்டது. இதனை சரி செய்ய மாற்றுக்கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்கிற அடிப்படையிலேயே மக்கள், விஜயை தேர்வு செய்திருக்கின்றனர். அவர், தமிழக வளர்ச்சி, மக்களின் நலன் சார்ந்த தொலை நோக்கு திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும். ஊழல் மற்றும் அரசு துறைகளில் லஞ்சம் ஒழிக்கப்பட வேண்டும்.

- சிவக்குமார், திருப்பூர்.

நல்லது செய்வார்...

ஆண்டாண்டு காலமாக, மாறிமாறி இரண்டு கட்சிகளின் ஆட்சியே தமிழகத்தில் நடக்கிறது. புதிதாக மற்றொரு கட்சி ஆட்சிக்கு வரட்டுமே என, மக்கள் அனைவரின் உள்ளத்திலும் ஒருசேர எழுந்த அலைதான், மற்ற கட்சிகளை மூழ்கடித்துவிட்டு, முதல் தேர்தலிலேயே விஜய்யை முதல்வராக்கி இருக்கிறது. அவர் மக்களுக்கு நிச்சயம் நல்லது செய்வார் என எதிர்பார்க்கிறேன். குற்ற செயல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும். ஓட்டளித்த மக்களின் நம்பிக்கை வீண்போகாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.

- சோலைமலை, திருப்பூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us