தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மக்களின் உணர்வு: மாறிய மக்கள் மனம்

மக்களின் உணர்வு: மாறிய மக்கள் மனம்

மக்களின் உணர்வு: மாறிய மக்கள் மனம்


UPDATED : மே 06, 2026 06:48 PM

ADDED : மே 06, 2026 06:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 06, 2026 06:48 PM ADDED : மே 06, 2026 06:41 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாறிய மக்கள் மனம்

இன்றைய தலைமுறை வாக்காளர்கள் தீர்க்கமாகச் சிந்திக்காமல், 'வாக்களித்தது சற்று வருத்தமளிக்கிறது. வெறும் நடிகர் என்ற கவர்ச்சியில் விழுந்து வாக்களிப்பதை விட, திட்டங்களைச் செயல்படுத்தும் அனுபவம் கொண்ட கட்சிகளுக்கு வாய்ப்பளித்திருக்கலாம். மாற்றம் தேவையென்ற நிலையில், மக்கள் மனம் மாறி விட்டனர். மக்களின் எண்ணங்களுக்கு உயிர் கொடுத்து திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

- மேனகா, அவிநாசி.

வளர்ச்சிக்கு முன்னுரிமை

யார் என்றே தெரியாத ஒரு வேட்பாளரைத் தேர்ந்தெடுத்தது தொகுதி வளர்ச்சியைப் பாதிக்கும். சினிமா மோகத்தைத் தியேட்டர்களோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். உள்ளூர் வேட்பாளருக்கு வாக்களிப்பதே தொகுதிக்கு நல்லது. இருந்தாலும், அவிநாசியில் வெற்றி பெற்ற வேட்பாளர் கமலி, தொகுதியின் வளர்ச்சி மற்றும் முன்னேற்ற திட்டங்களுக்காக குரல் கொடுத்து அதனை நிறைவேற்ற வேண்டும்.

- கார்த்திக், செம்பியநல்லுார்.

பெண்கள் முன்னேற்றம்

விஜய் வெற்றி பெற்றதில் தவறில்லை. ஆனால், அனுபவம் வாய்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் இல்லாத சூழலில், புதிய வேட்பாளர்கள் மக்களின் தேவைகளை எந்த அடிப்படையில் நிறைவேற்றுவார்கள் என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இருந்தாலும், மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். குறிப்பாக, பெண்கள் முன்னேற்றம் தொடர்பான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

- கலையரசி, கருவலுார்.

காலத்தின் கட்டாயம்

தமிழகத் தேர்தல் வரலாற்றில் இது ஒரு மவுனப் புரட்சி. எம்.ஜி.ஆரின் முக வசீகரத்தை விஜயிடம் மக்கள் காண்கிறார்கள். குறிப்பாகப் பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஒரு மாற்றத்தை விரும்பி மவுனமாகச் செயல்பட்டுள்ளார்கள். எந்தக் கருத்துக்கணிப்புகளிலும் சிக்காத இந்த வெற்றி, தமிழகத்தின் புதிய அரசியலுக்கான தொடக்கம். மக்கள் அளித்த மாபெரும் வெற்றியை கொண்டு நல்ல திட்டங்களை, அதுவும் மக்களுக்கு பயனளிக்கும் வகையிலான திட்டங்களை நிறைவேற்றுவது காலத்தின் கட்டாயம்.

- மூர்த்தி, போத்தம்பாளையம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us