UPDATED : மே 06, 2026 06:58 PM
ADDED : மே 06, 2026 06:53 PM

மக்கள் பேட்டி
அடுத்த தலைமுறைக்கு வழி
தமிழகத்தில், இரு கட்சிகளை தவிர்த்து, வேறு யாரும், மக்கள் மனதை பெற்று ஆட்சி செய்ய முடியவில்லை. தற்போது விஜயின் வருகையை, அனைத்து தரப்பு மக்களும் வரவேற்று, நம்பிக்கையில் ஓட்டளித்து வெற்றி பெற வைத்துள்ளனர். அசைக்க முடியாத வகையில், மக்களுக்கான ஆட்சியை தர வேண்டும். அடுத்த தலைமுறையினருக்கான கட்சியாக வந்துள்ளது.
- செந்தில்குமார், பெருமாநல்லுார்.
மக்களிடம் செல்வாக்கு
தமிழகத்தில் எம்.ஜி.ஆருக்கு பின், த.வெ.க. தலைவர் விஜயிற்கு மக்களின் பெருத்த ஆதரவு கிடைத்துள்ளது. இந்த ஆதரவு தான், முதல் தேர்தலில், இரு கட்சிகளை புறக்கணித்து, அவரை தேர்ந்தெடுத்துள்ளனர். லஞ்சம், ஊழல் போன்றவற்றை ஒழித்து, மக்களுக்கான ஆட்சியை கொடுக்க வேண்டும். அப்போது தான் மக்கள் உங்களை நம்புவர். இல்லாவிடில், திராவிட கட்சிகளுக்கு ஏற்பட்ட கதி தான், த.வெ.க.வுக்கும் கிடைக்கும்.
- லோகநாயகி, குன்னத்துார்.
