/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அமைச்சரின் பேச்சை கண்டித்து கிராம செவிலியர் ஆர்ப்பாட்டம்
/
அமைச்சரின் பேச்சை கண்டித்து கிராம செவிலியர் ஆர்ப்பாட்டம்
அமைச்சரின் பேச்சை கண்டித்து கிராம செவிலியர் ஆர்ப்பாட்டம்
அமைச்சரின் பேச்சை கண்டித்து கிராம செவிலியர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 08, 2025 12:40 AM

திருப்பூர்; தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கம் சார்பில், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பாலாமணி தலைமைவகித்தார். பொருளாளர் ஆரோக்கிய சார்லஸ் மேரி உள்பட செவிலியர்கள் பங்கேற்றனர்.
'கொரோனா தொற்று காலத்தில், அமைச்சராக சுப்பிரமணியன் பொறுப்பேற்றுக்கொண்டபின், ஞாயிற்றுக்கிழமை உள்பட விடுமுறை நாட்களிலும், தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதற்கு, சங்கம் சார்பில் எதிர்ப்பு தெரிவித்தோம். செவிலியர்களுக்கு உரிய ஓய்வும், விடுமுறையும் அவசியம் என, விளக்கினோம். இதனை திரித்து, தடுப்பூசி போட எதிர்ப்பு தெரிவித்ததாக அமைச்சர் பேசியுள்ளார். திண்டுக்கல் பத்திரிகையாளர் சந்திப்பில் அமைச்சர் பேசியதை, வாபஸ் பெறவேண்டும்' என, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.