/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிடப்பில் ரோடு புதுப்பித்தல் பணி தவிக்கும் கிராம மக்கள்
/
கிடப்பில் ரோடு புதுப்பித்தல் பணி தவிக்கும் கிராம மக்கள்
கிடப்பில் ரோடு புதுப்பித்தல் பணி தவிக்கும் கிராம மக்கள்
கிடப்பில் ரோடு புதுப்பித்தல் பணி தவிக்கும் கிராம மக்கள்
ADDED : ஜன 15, 2026 06:43 AM

உடுமலை: புதுப்பிக்க தோண்டப்பட்ட ரோட்டில், எவ்வித பணிகளும் பல மாதங்களாக மேற்கொள்ளப்படாமல் இருப்பதால், விருகல்பட்டி சுற்றுப்பகுதி கிராம மக்கள் தொடர் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
குடிமங்கலம் ஒன்றியம், விருகல்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பழையூர் கிராமத்தில் இருந்து வல்லக்குண்டாபுரம் கிராமத்துக்கு செல்ல, இணைப்பு ரோடு உள்ளது. இந்த ரோடு, குடிமங்கலம் ஒன்றிய நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது.
விருகல்பட்டி பழையூர், புதுார், ஜோத்தம்பட்டி உள்ளிட்ட பல கிராம மக்கள் இந்த ரோட்டை பயன்படுத்தி வருகின்றனர். பல இடங்களில் குண்டும், குழியுமாக காணப்பட்ட இந்த ரோட்டை புதுப்பிக்க வேண்டும் என, நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, சில மாதங்களுக்கு முன், ரோட்டை புதுப்பிக்கும் பணி, குடிமங்கலம் ஒன்றிய நிர்வாகத்தின் கீழ், துவங்கியது. இதற்காக, பழைய தார் ரோடு அப்புறப்படுத்தப்பட்டது. பின்னர் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல், கிடப்பில் போடப்பட்டுள்ளது.
பெயர்ந்து கிடக்கும் ஜல்லிக்கற்களுக்கு இடையே, இருசக்கர வாகனங்கள் செல்ல முடிவதில்லை. கிராமங்களுக்கு போக்குவரத்தே துண்டிக்கப்படும் நிலை உள்ளது. ஆனால், ஒன்றிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.
இதைக்கண்டித்து, குடிமங்கலம் ஒன்றிய அலுவலகம் முன் போராட்டம் நடத்த உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

