/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கலெக்டர் ஆபீசில் போராட்டம்; கிராம மக்கள் அறிவிப்பு
/
கலெக்டர் ஆபீசில் போராட்டம்; கிராம மக்கள் அறிவிப்பு
கலெக்டர் ஆபீசில் போராட்டம்; கிராம மக்கள் அறிவிப்பு
கலெக்டர் ஆபீசில் போராட்டம்; கிராம மக்கள் அறிவிப்பு
ADDED : ஜன 04, 2024 12:26 AM
பல்லடம் : பல்லடம் தாலுகா, வாவிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட குள்ளம்பாளையம் கிராமத்தில், தனியார் உள்ளாடை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் ஆரம்பம் முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக, நாளை (ஜன., 5) கலெக்டர் அலுவலகத்தில், தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, இப்பகுதி பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: வாலிபாளையம் சுற்றுவட்டார கிராமங்கள் முழுவதும் விவசாயத்தை நம்பி வாழ்கின்றன. விவசாய தொழில் நிறைந்த இப்பகுதியில், தனியார் உள்ளாடை தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க முயற்சி நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், இது தொடர்பாக, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தவறான ஆவணங்களை சமர்ப்பித்து, நில வகைப்பாடு செய்ய தனியார் நிறுவனம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இது தொடர்பாக, கலெக்டர் அலுவலகத்தில், 5ம் தேதி (நாளை) காலை 9.00 மணி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.