பல வளர்ச்சி திட்டங்களால் கிராமங்கள் வளர்ச்சி பெறும்: தி.மு.க. வேட்பாளர் திட்டவட்டம்
பல வளர்ச்சி திட்டங்களால் கிராமங்கள் வளர்ச்சி பெறும்: தி.மு.க. வேட்பாளர் திட்டவட்டம்
ADDED : ஏப் 13, 2026 10:17 PM

தாராபுரம்:''பல வளர்ச்சி திட்டங்கள் வாயிலாக கிராமங்கள் வளர்ச்சி பெறும், அதற்கு உறுதுணையாக இருப்பேன்,'' என்று, தாராபுரம் தி.மு.க. வேட்பாளர் இந்திராணி மூலனுார் ஒன்றியத்தில் தீவிர ஓட்டு சேகரிப்பில் மக்களிடம் தெரியப்படுத்தினார்.
தாராபுரம் (தனி) தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் இந்திராணி தேர்தல் களத்தில், மக்களை சந்தித்து தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, நேற்று மூலனுார் ஒன்றிய பகுதியில் பிரசாரத்தை நேற்று துவக்கினார். கிளாங்குண்டல் ஊராட்சி, ரங்கவலசு, பாப்பாவலசு, கள்ளிபெருக்குபாளையம், சேயைன்பாளையம், மட்டப்பாறை, புத்துார், ஐயம்பாளையம், செம்மாண்டகவுண்டன் புதுார் உள்ளிட்ட பகுதியில் கூட்டணி கட்சியினருடன் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வேட்பாளருக்கு கிராமங்கள்தோறும் மக்கள் உற்சாகமாக வேட்பாளரை வரவேற்பு அளித்தனர். அவர்களிடம் பேசிய வேட்பாளர் இந்திராணி, 'தனக்கு உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்க கேட்டு கொண்டார். முன்னதாக, அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தினர். வீடு, வீடாக சென்று மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். மீண்டும் தி.மு.க. ஆட்சி ஆட்சிக்கு வந்த பின், நகரம், கிராமங்கள் என, அனைத்திலும் தேவையான வளர்ச்சி பணிகள் செய்து கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
வேட்பாளர் இந்திராணி கூறியதாவது:
கடந்த, ஐந்தாண்டில் தாராபுரம் தொகுதியில், தி.மு.க. அரசு பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்து கொடுத்துள்ளது. தற்போது, மீண்டும் மக்களுக்கு பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒவ்வொரு கிராம வாரியாக ரோடு, குடிநீர் என, அடிப்படை வசதிகள் மீது கவனம் செலுத்தி நீண்ட கால பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்தப்படும். முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்த திட்டங்கள் வாயிலாக, ஒவ்வொரு குடும்பம் பயன்பெறும். தொகுதிக்குள் உள்ள நீண்ட கால பிரச்னைகளுக்கு தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு அமைத்த பின் தீர்க்கப்படும்.
